வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

நள்ளிரவில் உறுதிமொழி ஏற்ற மாற்றுத் திறனாளிகள்

திருப்பூர், ஜன. 26 – திருப்பூரில் அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தினர் 71ஆம் ஆண்டு குடியரசுதினத்தை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் நிலையில் குடியரசு அரசியல் சாசன முகப்புரை வாசித்து உறுதி மொழி ஏற்றனர். திருப்பூரில் தியாகி குமரன் நினைவகம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் டி.ஜெயபால் தலைமையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் உறுதிமொழி ஏற்றனர்.

;