tamilnadu

திருப்பூர் மாவட்டத்தில் செங்காந்தள் கிழங்கு விலை வீழ்ச்சி

திருப்பூர், ஜூன் 17- திருப்பூர் மாவட்டத்தில் செங்காந்தாள் கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மருத்துவ மூலிகையாகப் பயன்படும் கண்வலி கிழங்கு என்னும் செங்காந்தள் கிழங்கு அறுவடை மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிலோவுக்கு ரூ.120 முதல் 200 வரை மட்டுமே விலை கிடைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னி வாடி, தாராபுரம், வெள்ளகோவில் பகுதி களில் செங்காந்தள் விவசாயம் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் செங் காந்தள் விதையானது கிலோ 3 ஆயிரம் ரூபாய் முதல் 4500 வரை விற்பனையாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு கிலோ விதை ரூ.2500 க்கும் குறைவாக விலை போனதால், விவசாயிகள் நஷ்டம் ஏற்படும்  என விற்பனை செய்யவில்லை. விதையின் விலை குறைந்து போனதால் தற்போது அறுவடை செய்யப்படும் செங்காந்தள் கிழங்கின் விலையும் சரிந்து கிலோ ரூ.120 முதல் 200 ரூபாய் வரை மட்டுமே வாங்கப்படுகிறது. செங்காந்தள் விதை அறுவடை பிப்ரவரி மாதத்தில் முடிந்து, ஜூன் மாதத்தில் பெய்யும் கோடை மழையை கொண்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கிழங்கு அறுவடை நடை பெறும். விவசாயிகள் தங்களுக்கு தேவை யான விதை கிழங்கு போக மீதமுள்ள விதை கிழங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதே நேரத் தில் கிழங்கு ரூ.400 வரை வாங்கப்பட்ட நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விலை சரிவால் விவசாயிகள் கிழங்கு அறுவடை செய்தாலும் குறைவான விலைக்கே விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். செங்காந்தள் விதை விலை சரிவினை தொடந்து தற்போது கிழங்கின் விலையும் 50 சதவிகிதம் சரிந்துள்ளதால் இதனை பயிரிட பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ள விவ சாயிகள் கடும் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தோட்டக்கலைத் துறையின் மூலமாக உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.