திருப்பூர், ஜன. 22 – பத்மாவதிபுரத்தில் தொடரும் நகைப் பறிப்புச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி பெண்கள், பாதசாரி களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது. இதுகுறித்து மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி யுடன் பத்மாவதிபுரம் கிளை நிர் வாகிகள் சாந்தி, கலாமணி, லலிதா, ரேவதி உள்ளிட்டோர் புதனன்று மாநகர காவல் ஆணையர் அலுவல கத்திற்குச் சென்று புகார் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் மாநகராட்சி 10 ஆவது வார்டுக்குள் காந்திநகர், பத்மாவதிபுரம் மற்றும் ஜீவா காலனி உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. ஏராளமான வீடுகள், பனியன் தொழிற்சாலைகள், பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. இப் பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் பெண்களிடம் நகைப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத னால் பெண்கள் கடைகள், கோயில் களுக்கு என வெளியே செல்ல முடி யாமல் அச்சப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ஜீவா காலனி பகுதியில் இரு பெண் களிடம் தனித்தனியே நகைப் பறிப்பு முயற்சிகள் நடைபெற்றது. இது போன்ற தொடர் சம்பவங்களால் பெண்களின் உயிருக்கும், உட மைக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஜீவா காலனி பகுதியில் சாலையில் தனி யாக நடந்து வரும், காலை நேரங் களில் கோலம் போடும் பெண் களிடம் வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயலும் சம்பவங்களும் நடக் கிறது. இதுபோன்ற சமூக விரோத சம்பவங்களை தடுத்து நிறுத்தி, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், நகைகளை பறி கொடுத்த பெண்களுக்கு நகை களைக் கண்டுபிடித்துத் தரும் படியும் மாதர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சாக்கடை தூர்வார கோரிக்கை
அத்துடன் மாதர் சங்கத்தினர் திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையரிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியி ருப்பதாவது: ஜீவா காலனி, அங் கேரிபாளையம் சாலையில் உள்ள சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்யாமல் குப்பை கழிவுகள் அடைத்து சாக்கடை நீர் தேங்கி நிற் கிறது. இது தாழ்வான பகுதி என்ப தால் மழைக்காலங்களில் சாக்கடை மற்றும் வெள்ள நீரும் சேர்ந்து சாலை களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் சுகாதாரமின்மை தொடர்ந்து ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் தெரு விளக்குகள் பழுத டைந்தால் முறை யாகவும், உடனடியாகவும் சீர் செய் யப்படுவதில்லை. மாதங்கள் கழித்தே மாநகராட்சி தெருவிளக்கு பராமரிப்பு பிரிவிலிருந்து வரு கின்றனர். பணியாளர்கள் வந் தாலும் பழுதடைந்த அனைத்து தெரு விளக்குகளையும் சரி செய்வ தில்லை. இதன் காரணமாக இப்பகுதியில் 10க்கும் மேற் பட்ட பெண்களிடம் தெருவில் தொடர் நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. போதிய அளவில் தெருவிளக்குகள் எரியாமல் இருப் பது திருடர்களுக்கு சாதகமாக இருக் கிறது. மேலும் அவிநாசி சாலையில் மழைக்காலங்களில் மழைநீரானது தாழ்வான பகுதியான காந்திநகர் கிழக்கு பகுதியை நோக்கிவரு கிறது. தற்போது சாலையின் நடுவே மையதடுப்பு சுவர் அமைக்கப்பட் டுள்ளதால் வெள்ளநீர் வழிந்தோடா மல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பல மணி நேரம் போக்கு வரத்து நெரிசலும், சாக்கடை நீரால் சுகாதாரமற்ற நிலையும் ஏற்படுகிறது. எனவே மழைநீர் வழிந்தோடும்வகையில் குறிப் பிட்ட இடத்தில் மட்டும் சிமெண்ட் தடுப்பை தவிர்த்து ”இரும்பிலான.சாலை தடுப்பு” அமைத்தும் அப் பகுதியில் சாக்கடை கால்வாய் களை முறையாக சுத்தம் செய்யவும் வேண்டும் என்று கேட்டுக் கொண் டுள்ளனர்.