திருப்பூர், ஜன. 26 – பெருந்துறை, ஊத்துக்குளி வட்டா ரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியையும், விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர் அமைப்பையும் உருவாக்கி வளர்த் ததில் முக்கியப் பங்காற்றிய சாலப் பாளையம் எஸ்.பி.கந்தசாமி நினைவு தினம் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் தலைமறைவாக இருந்தபோது, அவர் களைப் பாதுகாத்து வந்த எஸ்.பி.கந்த சாமியை ஊத்துக்குளி காவல்நிலை யத்தில் வைத்து சித்திரவதை செய்து, மீசை முடி பிடுங்கப்பட்டபோதும், கம்யூனிஸ்ட் தலைவர்களை காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்தவர். மேலும் கட்சி தடை செய்யப்பட்டு நெருக்கடி யான காலகட்டத்தில் தன்னை நாடி வந்த தலைவர்களை பராமரித்து பாது காப்பாக அனுப்பி வைத்தவர், மறைந்த தோழர் கே.ரமணியின் சகதோழராக பயணித்தவர். மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் பலரும் இவருடைய அரவணைப்பிலேயே இவரது தோட் டத்தில் தங்கி இளைப்பாறி சென்றிருக் கின்றார்கள். கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தோழர் சி.ஏ.பாலன் இவரது தோட்டத்தில் தலைமறைவாக இருந் திருக்கிறார். அக்காலகட்டத்தில் விவ சாயிகளுக்கான வலுவான போராட் டங்களை முன்னெடுத்தவர், தலித் மக்கள் உரிமைக்காக களப்பணி ஆற் றியவர். ஊத்துக்குளி பகுதியில் சாயப் பட்டறைகள் வருவதைத் தடுத்து நிறுத்தியவர், கைத்தமலை ஆலயத் தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சரிச மமாக கோயில் கருவறை மண்டபத் தில் வைத்து திருமணம் நடத்தவேண் டும் என்கிற கோரிக்கைகாக அக்கால கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை திரட்டி சென்று களப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். 1991ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.பி.கே. உயிரிழந்தார். அவரது 29ஆவது ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. ஊத்துக்குளி சாலப்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் மாலைகள் வைத்து திரளான தோழர் கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத் தினர். செங்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப் பினர் பெருந்துறை ஜி.பழனிசாமி, திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.குமார், சி.மூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் கே.சரஸ் வதி, ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி, பெருந்துறை கமிட்டி உறுப்பினர் கே.ரவி உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊத்துக்குளி ஆர்.எஸ். மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா அலுவ லகம் முன்பு குடியரசு தின விழா வில் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து அரசியல் சாசன முகவுரையைக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ் வில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.குமார், சி.மூர்த்தி, மாவட் டக்குழு உறுப்பினர் கே.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.