tamilnadu

img

அவிநாசி: பிரதான சாலையை மறைத்து ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைத்த அதிமுகவால் பொதுமக்கள் அவதி!

அவிநாசியில் உள்ள சேவூரில், பிரதான சாலை ஒன்றை மறைத்து அதிமுகவினர் மேடை அமைத்து பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளனர். 
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சேவூரில், நீலகிரி எம்.பி அ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவினாசி ஸ்டேட் பேங்க் வீதியில் குலாலர் கல்யாண மண்டபம் அருகே சாலையை மறைத்து ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்கப்பட்டது. இதன் காரணமாக அச்சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு காலை எட்டு மணி, முதல் வேறு பாதையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வீதியில் பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டேட் பாங்க் வங்கி வாடிக்கையாளர் சேவை மிகவும் பாதிப்பு ஏற்பட்டு, பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் பத்து மணி முதல் 12 மணி வரை அவதிப்பட்டு வந்தனர். இதற்கிடையில் தொண்டர்களை அழைத்து வந்த வாகனங்கள் கோவை திருப்பூர் செல்லும் சாலையில்  வாகனங்களை நிறுத்தம் செய்து தொண்டர்களை இறக்கி விடும் தருவாயில் 15 நிமிடம் ஒவ்வொரு வாகனங்களுக்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்துக் காவல் துறையினரும் காவலர்களும் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் வீதியில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை துணிக்கடை ,பாத்திர கடைகள், பூக்கடை ஸ்பேர் பார்ட்ஸ் கடை, எலக்ட்ரிக் கடைகள் போன்ற வியாபாரிகள் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத காரணமாக வேறு வழி இன்றி வியாபாரிகள் கடை அடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் துணிக்கடை மற்றும் பூக்கடையினர் தை அமாவாசை தினத்திலும், இந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்ட காரணமாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் இழப்பு ஏற்பட்டது.