tamilnadu

திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.13,777 கோடி மதிப்பில் நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

திருப்பூர், நவ. 21 - நபார்டு வங்கியின் 2021-2022ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன்திட்ட அறிக்கையினை திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன்  வெளியிட்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில், சனிக்கிழமை மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டத்தில், இந்த கடன் திட்ட அறிக்கையை அவர் வெளியிட் டார். அப்போது அவர் கூறுகையில், நபார்டு வங்கி தயாரித்த திருப்பூர் மாவட்டத் திற்கான 2021-22 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டம் ரூ.13 ஆயிரத்து 777 கோடியே 90 லட்சமாக மதிப்பிடப்பட்டுள் ளது.

இது கடந்த ஆண்டின் கணிப்புகளை விட 11 சதவீதம் அதிகம். இத்திட்டம் ரிசர்வ் வங்கியின் முன்னோடி கடன் வழிமுறை களையும், அரசு திட்டங்களையும், மாவட் டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, உருவாக்கப்படுகின்ற உட்கட்டமைப்புகள் மற்றும் வங்கிகள், அரசு துறைகளின் ஆலோ சனை மற்றும் புள்ளி விவரங்களின் அடிப் படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர், நபார்டு வங்கி யின் திருப்பூர் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜு, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கோமகன், அரசு அலுவலர்கள் மற்றும் வங்கி யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.