ஆம்பூர், ஜன.1- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அர்பாண்ட குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் அம்சா மூதாட்டி, தந்தை மாரி முத்து இவருக்கு பிறப்பிலிருந்தே தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். வயது 65 ஆகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு உணவு மற்றும் உடை வாழ்வதற்கான ஏதும் ஆதாயம் இல்லா மல் மிகவும் கஷ்டத்திற்குள்ளாகினர். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன், வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வழியாக மூதாட்டி நிலை குறித்த தக வலை அனுப்பினார். இது வைரலாக பரவி யது. இது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம. ப. சிவனருள் பார்வைக்குச் சென்ற அரை மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து உதவித் தொகை வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, வாணியம்பாடியை சேர்ந்த சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் மஹா லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று அந்த முதி யோரை சந்தித்து உதவித்தொகையை வழங் கினார். மேலும், புத்தாண்டையொட்டி புதிய துணி வகைகள், இனிப்பும் வழங்கினர்.