tamilnadu

நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி முக்கிய செய்திகள்

காலமானார்
நாகர்கோவில், டிச.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருமனை வட்டாரக் குழு உறுப்பினரும், தீக்கதிர் நிருபருமான ரமேஷ் தாயார் ரெஞ்சிதபாய்(68) சனிக்கிழமை இரவு 12 மணியளவில் கால மானார். அவரது இறுதிச் சடங்கு அருமனையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிறன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.  இறுதிச் சடங்கில், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன்,  அண்ணாதுரை, வட்டாரச் செயலாளர் ஜெயராஜ், மாவ ட்டக் குழு உறுப்பினர்கள் சசிகுமார், சிங்காரன், அதிமுக மாவ ட்டச் செயலாளர் ஜான்தங்கம் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் இறுதி மரி யாதை செலுத்தினர். அவருக்கு ரமேஷ் உட்பட 3 மகன்க ளும், 1 மகளும் உள்ளனர்.

நகை கொள்ளை
தூத்துக்குடி, டிச.29- தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் வேலாயுதநகரைச் சேர்ந்தவர் பழனிமுத்து (35). சம்பவத்தன்று இவர் வீட்டை  பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த நிலையில் மர்மந பர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த  சுமார் 2 கிராம் எடையுள்ள தங்க நகையை திருடி சென்றது  தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தனமரம் கடத்த முயன்ற 3 பேர் கைது 
திருநெல்வேலி, டிச.29- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கும் கள க்காடு முண்டந்துறை சேர்வலாறு வனப்பகுதியில் பாதர் பீட் பகுதியில் முருகன், அசோக், மாயாண்டி ஆகியோர் சந்தன  மரத்தை வெட்டி கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டு, அம்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை வழக்கில் தொடர்பு  2 பேர் சிறையில் அடைப்பு
திருநெல்வேலி, டிச.29- மானூரில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். நெல்லை மாவட்டம் மானூர் தெற்குபட்டியைச் சேர்ந்த வர்கள் தங்கராஜ் (58), சுடலையாண்டி (37). இவர்கள் மீது அடி தடி, கொலை வழக்குகள் உள்ளன. பொதுஅமைதிக்கு குந்த கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடுவதால் இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட  எஸ்பி. ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரைத்தார். இதையடுத்து மாவ ட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின்பேரில் தங்க ராஜ், சுடலையாண்டி ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்  கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில டைக்கப்பட்டனர்.

;