tamilnadu

திருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்

தரமற்ற திருப்புடை மருதூர் சாலைப் பணி பொது மக்கள் போராட்டம்                                                                                                                                                                                                                                                                                                                                                                               நெல்லை: முக்கூடல் திருப்புடைமருதூர் சாலையை தரமாக அமைக்க கோரி அப்பகுதி மக்கள் நெல்லை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். பின்னர் அவர்கள் ஊரக சாலை பிரிவு கண்காணிப்பு பொறியாளரி டம் அளித்த மனு: பாப்பாக்குடி அருகே உள்ள திருப்புடைமருதூர் பகுதி மக்கள் திரளாக வந்து நெல்லை ஆயுதப்படை சாலையில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட முக்கூடல் முதல் திருப்புடை மருதூர் வரையிலான தார்ச்சாலை ஊரக சாலை  மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணி முடிக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமற்றதாகவும், தார் குறைவாகவும் காணப்படுகிறது. இச்சாலையை திருப்புடைமருதூர் சுற்றுவட்டார கிராமங்களும், அங் குள்ள நாறும்பூநாதர், கோமதி அம்மாள் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதிகாரிகள் அச்சாலையை ஆய்வு செய்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் முதல் பிளாஸ்மா தானம்

திருநெல்வேலி: பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனு மதி அளித்துள்ளது. கொரோனாவி லிருந்து குணமடைந்தோரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா திர வத்தை எடுத்து சிகிச்சையிலி ருக்கும் நோயாளியின் உடலில் செலுத்தப்படும். இதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அந்த நோயாளி கொரோனாவிலிருந்து விரைவில் குணமடைய முடியும்.  ஏற்கனவே பல மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை முறை பின் பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், திரு நெல்வேலி, கோவை ஆகிய இடங்க ளில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப் படும் என அரசு ஏற்கனவே அறி வித்திருந்தது. அதன்படி, திருநெல் வேலி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் பெறுவது வியா ழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவிலிருந்து குண மடைந்த முக்கூடல் பகுதியைச்சேர்ந்த வர் பிளாஸ்மா தானம் அளிக்க முன் வந்ததால்  அவரிடமிருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது.

153 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத னால் பாதித்தோர் எண்ணிக்கை 3500 கடந்தது. 1,909 பேர் குணம டைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,459 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுவரை 19 பேர் உயி ரிழந்துள்ளனர்.

ஆதரவற்ற மாற்றுத்திறனாளி சிறுவன் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிரா மம் சுனாமி காலனியில் சனியன்று காலை மாற்றுத்திறனாளி சிறுவன் கவனிப்பாரற்று சுற்றி திரிகின்றான் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் பரவி யது. இதுகுறித்து ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதைதொடர்ந்து இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி பெஞ்சமின் உத்தரவின் பேரில் ஆட்சியர் நேரடியாக சென்று அந்த சிறுவ‌னை மீட்டு லூசியா மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் ஒப்ப டைத்தார். சிறுவனை மீட்க உதவி செ ய்தோருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

திருநெல்வேலி: இந்தியாவின் கடைசி மன்னரான சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ் முருகதாஸ் திர்த்தபதி கடந்த மே 24ம் தேதி உடல் நலக் குறைவால் காலமா னார் இதனால் அவரது அரண்மனை யில் இருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது.பொதுமக்களின்விருப்ப திற்கேற்ப அந்த அருங்காட்சி யகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொ ரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து அருங்காட்சியகத்தை காலை முதல் மாலை வரை பொதுமக்கள் இலவச மாக பார்க்கலாம் என்று அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;