tamilnadu

திருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்

1,195 பேர் பாதிப்பு

 திருவனந்தபுரம், ஆக.6- கேரளத்தில் புதனன்று 1195பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப் பட்டது. தொடர்பு மூலம் 971 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் நோய் தொற்றிடம் தெரியாத 79பேர் உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார். புதனன்று நோய் தொற்று ஏற்பட்ட தில் 66 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 125பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். 13 சுகாதார ஊழியர்கள் கோவிட் நோய் தொற்றுக்கு உள்ளாயினர். 7 கோவிட் மரணம் ஏற்பட் டுள்ளது. மொத்த உயிரிழப்பு 94 ஆக அதி கரித்துள்ளது. 

இன்று முதல்வர் வருகை

திருநெல்வேலி, ஆக.6- தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி வெள்ளிகிழமை நெல்லை வரு கிறார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்கின் றனர். 

விமான சேவை துவக்கம்

தூத்துக்குடி, ஆக.6- தூத்துக்குடி - பெங்களூரு இடையே விமான சேவை சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் ஆக.8ம் தேதி மீண்டும் துவங்க உள்ளது. வாரத்திற்கு 3 நாட்கள் விமா னங்கள் இயக்கப்படும் என இன்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் நடவடிக்கை கார ணமாக உள்நாட்டு விமான போக்கு வரத்து கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 45 சதவீத பயணிகளுடன் இயக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி யளித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி- பெங்க ளூரு இடையே இன்டிகோ விமான சேவை வருகிற 8ம் தேதி மீண்டும் தொடங்கு கிறது. இதன்படி செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் விமான சேவை நடை பெறும் என்று இன்டிகோ நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தக வலை விமான நிலைய இயக்குநர் சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

வியாபாரி பலி

தூத்துக்குடி, ஆக.6- தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பிச்சையா (52), இவர் சின்னக்கண்ணு புரத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். செவ்வாயன்று தனது கடை முன்பாக காப்பரை பிரித்து எடுப்பதற்காக வயர் களை தீவைத்து எரித்துக் கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீக்குள் தவறி விழுந்த அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிதி உதவி

தூத்துக்குடி, ஆக.6-  தூத்துக்குடி மாவட்டம், பேரூர் கிரா மத்தைச் சேர்ந்த சி.ஆர். பி.எப் வீரர் அமிர்த சுந்தர் கடந்த 2003 இல் பணியில் சேர்ந்தார். அவர் ஒடிசாவில் பணிபுரிந்து வந்தபோது கடந்த ஜூன் 13 ஆம் தேதி உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். அவரது குடும் பத்திற்கு தூத்துக்குடி மாவட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் நிதி திரட்டி ரூபாய் ஒரு லட்சத்தை அவருடைய மகளின் பெயரில் டெபாசிட் செய்து அதற்கான பத்திரத்தை பெற் றோர்களிடம் வழங்கினர்.

கப்பல் நிறுத்திவைப்பு

தூத்துக்குடி, ஆக.6- தூத்துக்குடியில் இந்திய கடலோர காவல்படை கப்பலான வைபவ் என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கிறது. இந்த கப்பலில் பணியாற்றும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அங்கு பணியாற்றும் 80 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனை வரும் தூத்துக்குடி துறைமுக வளாகம் அருகேயுள்ள கடலோர காவல்படை யினரின் குடியிருப்பில் தனிமைப்படுத்தப் பட்டு உள்ளனர்.

பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி, ஆக.6- தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி ஜோதி நகா் 2ஆவது தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மனைவி காளீஸ்வரி (43). இவா் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது இரத்த அழுத்தம் காரணமாக மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுத்தபடுக்கையாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில் இம்மாதம் 1ஆம் தேதி கட்டிலிலிருந்து  தண்ணீா் பாட்டி யலை எடுக்க முயன்றபோது விழுந்து  பலத்த காயமடைந்த அவர், மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

 

;