தஞ்சாவூர், மார்ச் - திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருக்குறுங்குடி பெரிய ஏரியில் உள்ள பழமையான மதகில் அரிய சிற்பங்கள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் ஏரி நீர்ப் பாசனத்து க்காக அறிவியல் தொழில் நுட்பத்து டன் பயன்படுத்திய மதகுக் கட்டு மானத்தைக் குமிழித்தூம்பு எனக் குறிப்பிடுவர். மாவட்டந்தோறும் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் கரையி லிருந்து ஏரியின் உட்புறம் சிறிது தூரத்தில் இரண்டு கல்தூண்கள் குறுக்கு விட்டங்களுடன் நிற்பதைக் காணலாம். அந்த இடத்திலிருந்து பூமிக்குக் கீழாக அமைக்கப் பெற்றுள்ள சுரங்கக் குழாய் வழி யாக வெளியேற்றப் பெறும் நீர் ஏரிக் கரைக்கு வெளியே வந்து கால்வாய் வழி பாயும். இத்தகைய குமிழித்தூம்பு அமைப்பால் பாசனம் பெறும் ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு எவ்வ ளவு நீர்த்தேவையோ அந்த அளவு நீரை மட்டுமே வெளியேற்றலாம். அதே நேரத்தில் ஏரியின் தரையில் படியும் சகதியின் பெரும்பகுதி நீரோடு வெளியேறும் வகையில் தொழில்நுட்ப அமைப்பு இருப்ப தால் அவையும் ஏரியின் தரையில் படியாது. ஆங்கிலேயர் காலத்தில் பொதுப் பணித்துறை ஏரிகளை பராமரிக்கத் தொடங்கியதிலிருந்து தூம்புகள் கைவிடப்பட்டன. ஏரிகளும் மேடிட்டு அழிந்தன. பராமரிப்பு இல்லாமல் கைவிடப் பெற்ற இத்தகைய குமிழித்தூம்புகளின் தூண்களில் பல்லவர்கள், சோழர், பாண்டியர், பிற்கால அரச மரபினர் எனப் பலர் காலத்துக் கல்வெட்டுக்களும், அரசு சின்னங்களும், தெய்வச் சிற்பங்களும் காணப் பெறுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குமிழியின் பெயரே “இராஜராஜன்” எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. திருக்குறுங்குடி ஏரியில் உள்ள குமிழித் தூம்பின் தூண்கள் இரண்டி லும் சங்கு, சக்கரம், முதலை, ஆமை போன்ற உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. அந்த குமிழித் தூம்பினை திருமா லின் அம்சமென மக்கள் போற்றிய தால் சங்கு சக்கரம் ஆகியவற்றை பொறித்துள்ளனர். இந்திய கலை மரபில் கங்கை யின் வாகனமாக முதலையையும், யமுனையின் வாகனமாக ஆமை யையும் காட்டுவது மரபு. இங்கு ஏரி நீரை கங்கை, யமுனை நீராக மக்கள் கருதியதால் முதலையையும் ஆமையையும் சிற்பங்களாகக் காட்டியுள்ளனர். தூம்பும் நீரும் மிகவும் புனிதமுடையவை என்ப தைக் காட்டும் வகையில் இக்குமி ழித்தூம்பு அமைந்துள்ளது. ஏரிகளில் பொது மராமத்து தூர்வாருதல் என்ற பணியினால் இத்தகைய குமிழித் தூம்புகளை பொக்லைன் இயந்திரங்கள் அழித்து விடும் அபாய நிலை உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இத்தகைய குமிழித் தூம்புகளைப் பாதுகாக்கப் பெற்ற வரலாற்றுச் சின்னங்களாக அறிவித்துக் காப்பாற்ற வேண்டும்”. இவ்வாறு குடவாயில் பாலசுப்ர மணியன் தெரிவித்தார்.