tamilnadu

கொள்ளிடம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை: 2 பேர் கைது

சீர்காழி, ஜூன் 9- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பரவங்காடு கிராமம் கேசவன் நகரைச் சேர்ந்த தங்கராசு மகன் நடராஜ மணி(40). இவர் சென்னையில் ஒரு தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தார் நடராஜமணி. இந்நிலையில் நடராஜமணி, அவரின் தாய் தனம்(70) ஆகியோர் வீட்டிற்கு முன்பு சம்ப வத்தன்று இரவு நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அதே தெருவில் வசித்து வரும் பாலையா மகன் கார்த்தி(32) என்பவர் குடிபோதையில் வந்த போது நடராஜமணியை பார்த்து திட்டியதாக கூறப்படுகிறது அப்போது அருகில் நின்று கொண்டிருந்த தனத்தையும் திட்டினார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த கார்த்தி, தனத்தை தாக்கினார். இதில் காயம் ஏற்பட்ட தனம், கொள்ளிடம் காவல்துறையில் புகார் கொடுத்தார். இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடராஜ மணி, கொள்ளிடம் ரயில் நிலையம் எதிரே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த கார்த்தி மற்றும் இதே பரவங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி நண்பர் ராமசாமி மகன் சத்யா(33) ஆகியோர் சேர்ந்து பட்டப்பக லில் கிராம மக்கள் கண் எதிரிலேயே கையில் வீச்சரிவாளு டன் விரட்டி வந்து நடராஜமணியை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் நடராஜமணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தக வலறிந்த நாகை எஸ்.பி விஜயகுமார், சீர்காழி டி.எஸ்.பி வந்தனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர்.