tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சி துவாக்குடி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.23-திருச்சி பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரையிலான இணைப்புசாலையை அமைக்க வேண்டும் இதற்காகஅப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இதுசம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதமே ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால்ஆக்கிரமிப்பாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர்.இதைதொடர்ந்து மீண்டும் 10 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து செவ்வாய் அன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரையிலான கடைகளில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 500 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படும் பணி தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 


திருச்சி போலி பாஸ்போர்ட்: வாலிபர் கைது

திருச்சிராப்பள்ளி, ஏப்.23-பஞ்சாப் மாநிலம் கொத்த கொய்யா பகுதியை சேர்ந்தவர்குருகரண்பீர்சேத்ரி(35). இவர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டா விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் போலியான முத்திரை இடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் அவரை பிடித்து ஏர்போர்ட் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதைதொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்துகாவலர்கள் கைது செய்தனர். 


லாட்டரிச் சீட்டு விற்ற 3 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஏப்.23-திருச்சி காந்தி மார்க்கெட், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில்லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து காவல் ஆணையர் உத்தரவின் பேரில்காந்தி மார்க்கெட், உறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது லாட்டரி விற்றதாக சக்திவேல், முத்துக்குமார், ராதாகிருஷ்ணன் ஆகிய3பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கத்தைகத்தையாக லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.