tamilnadu

img

திருவிக பிறந்த நாள்

திருவாரூர் ஆக26- தொழிற்சங்கவாதியும், சுதந்திர போராட்ட வீரரும் தமிழ்த்தென்றல் என்றும் அழைக்கப்பட்டவரும் திருவி.கலியாண சுந்தரனார் பிறந்த நாள் விழாவையொட்டி திங்கட்கிழமை திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திரு.வி.க சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் இரா.தாமோதரன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். சிஐடியு மாநில செயலாளர் ஆர்.மோகன், மாவட்ட செயலாளர் டி.முருகையன், தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் கவிஞர் மா.சண்முகம், கவிஞர் மனிதநேயன், சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் எஸ்.ராமசாமி, சிபிஎம் நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஆர்.கோவிந்தராஜ், அப்பாராவ் உள்ளிட்டோர் புகழ் வணக்கம் செய்தனர்.