வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி

புதுக்கோட்டை, ஏப்.19-புதுக்கோட்டை திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போலநூறு சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளது.ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆண்கள் 43, பெண்கள் 34 மொத்தம் 77 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் நூறு சதவீதம் தேர்ச்சியடைந்து வழக்கம்போல் சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் ரா.சுகுமாறன், கா.அனீஸ் பாத்திமா, சீ.மீனாட்சி,மு.சுப்புராமன், மு.ஆனந்தகுமார், எஸ்.ஹரிதா, ஜே.பி.கமல்ராஜ் ஆகியோர் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளி ஆலோசகர் அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, ராஜாமணி, ரம்யா உள்ளிட்டோர் பாராட்டினர்.

;