கும்பகோணம், ஜூன் 24- ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் இணைய தளம்(சர்வர்) பிரச்சனையால் தேர்வு எழுத முடியாமல் தேர்வாளர்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து தேர்வு ரத்து செய்து வேறு ஒரு நாளில் நடத்த வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கணினி இயக்குபவர் பயிற்றுநர் நிலை ஒன்று(முதுநிலை ஆசிரியர் நிலை) பணிக்கான கணினி வழி தேர்வு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வுக்கு 314 தேர்வாளர்கள் தேர்வு எழுத சென்ற ஒவ்வொரு தேர்வாளர்கள் அவர்களது ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை இணையதளம் மூலம் சரிபார்த்து தேர்வுக்கு அனுப்ப காலதாமதம் ஆனது. மேலும் கணினி வழி மூலமாக தேர்வினை எழுத வேண்டும். ஆனால் சர்வர் பிரச்சனையால் தேர்வு எழுத முடியாமல் தேர்வாளர்கள் அவதிப்பட்டனர். ஒரு சில ஆவணங்களை சரிபார்த்து பின்னர் தேர்தல் கூடத்துக்குள் சென்றதும் காலதாமதம் காரணமாக தேர்வு எழுதவில்லை. பின்னர் தேர்வு நேரம் முடிந்து வெளியே வந்த தேர்வா ளர்கள் சர்வர் பிரச்சனையால் தேர்வு எழுத முடியாமல் அவதிப்பட்டதை அடுத்து தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த தேர்வினை முழுமையாக ரத்து செய்து விட்டு வேறு ஒரு நாளைக்கு நடத்த வேண்டும் என கல்லூரி வாயில் முன் போராட்டம் நடத்தி முழக்கங் களை எழுப்பினர். இதற்கிடையில் தேர்வினை எழுத முடி யாத அவர்களுக்கு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மற்றொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என தேர்வு மைய பார்வையாளரால் அறிவிக்கப்பட்டது.