tamilnadu

img

‘இதயத்துக்காக ஓடுங்கள்’  மாரத்தான் போட்டி 

 திருச்சிராப்பள்ளி, ஆக.22- திருச்சி காவேரி மருத்துவமனை, சிஐஐ, யங்இந்தியன்ஸ் சார்பில் மாரத்தான் 2019 எனும் விழிப்புணர்வு ஓட்டம் செப்டம்பர் 29ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் நிருபர்களிடம் கூறியதாவது: செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினத்தை முன்னிட்டு இதயத்துக்காக ஓடுங்கள் எனும் கருத்தை வலியுறுத்தி திருச்சி மாரத்தான் 2019 நடைபெறுகிறது.  உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இல்லாததால் இதய நோய் அதிகரித்துள்ளது. இளம்வயதினரும் இதனால் பாதிக் கப்படுகின்றனர். மக்களிடம் நடைபயிற்சி குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்த திருச்சி மாரத்தான் 5வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இதில் 5, 10 கிமீ பிரிவு போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டணம் ரூ250. இதில் கலந்து கொள்ப வர்களுக்கு டிஷர்ட், பதக்கம், பேக், உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பெயர் பதிவு செய்து கொள்ள தென்னூர் காவேரி மருத்துவமனை, கண்டோன்மெண்ட் ஹார்ட் சிட்டி மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 80802-00200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.  பேட்டியின் போது சிஐஐ திருச்சி தலைவர் சையது ஆரிப், துணைத்தலைவர் வாசுதேவன், யங்இந்தியன்ஸ் தலைவர் செந்தில்நாதன், துணைத்தலைவர் கேத்தன்ஜேபோரா ஆகியோர் உடனிருந்தனர்.