மயிலாடுதுறை, ஜன.25- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்த லில் உள்ள ஏவிசி கல்வி நிறுவனத்தின் என்.எஸ்.எஸ் மற்றும் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா வெள்ளிகிழமை நடத்தினர். என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் முனை வர் அ. யமுனா வரவேற்றார். ஏவிசி கல்வி நிறுவனங்களின் செயலர் கி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதல்வர் ஆர்.நாகராஜன்; முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலு வலர் எஸ்.அழகிரிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பி.சண்முகவேல் மற்றும் வி. ராம்குமார் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பேசினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை என்.எஸ்.எஸ் அலுவலர்கள் ஜெயக்குமார், சிவகுமார், சரவணன், விஜயலட்சுமி, சௌந்தரநாயகி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். இருசக் கர வாகன நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ.பெரியசாமி நன்றி கூறினார்.