tamilnadu

img

‘அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்’ கருத்தரங்கு  

திருச்சிராப்பள்ளி: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாணவர் அணி சார்பில் இந்திய அரசியல மைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கரா ஜன், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய தலை வர் காதர்மொய்தீன், மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபுபக்கர் ஆகியோர் கருத்துரை  வழங்கினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.