tamilnadu

img

வாழ்வாதார நிவாரணம் கேட்டு தனியார் பள்ளிகள் போராட்டம்

திருவாரூர், ஜூலை 10- கொரோனா பேரிடர் காலத்தில் நெருக்கடியைச் சந்தித்து வரும் தனியார் மெட்ரிக்குலேசன் மற்றும் நர்சரி பள்ளிகள் சார்பில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பள்ளிகளின் தாளாளர் கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். வாழ்வாதார ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. குறைந்த பட்ச ஊதியத்திற்கு தனியார் பள்ளிக ளில் வேலை பார்க்கிறோம். தற்போ தைய பேரிடர் காலத்தில் அந்த ஊதிய மும் கிடைக்காமல் சிரமப்படுகி றோம். எனவே அரசு எங்களின் சிர மத்தினை போக்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருபால் ஆசிரியர்கள் தெரிவித்த னர்.