திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

பள்ளியில் பொங்கல் விழா

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநிலத் துணை பொதுச் செயலாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் தனக்கு முன் உதாரணமாக கல்வியில், ஆராய்ச்சி துறைகளில் சாதனை படைத்தவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார். மேலும் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ் வரவேற்றார். பள்ளி அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், பிரியதர்ஷினி, அஸ்வின்ஸ்ரீதர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;