செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

img

போலியோ சொட்டு மருந்து முகாம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார்.   நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சீர்காழி: நாகை மாவட்டம், சீர்காழி அருகே மாதிரவேளூர் கிராமத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்து ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜ் பேசுகையில், இந்த சுகாதார நிலையத்தில் இரவும் பகலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இரவு நேரங்களில் அவர்களின் வசதிக்கேற்றவாறு சுகாதார நிலையத்தையொட்டி குடியிருப்பு வீடு கட்டித் தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  வட்டார மருத்துவ அலுவலர் பபிதா, மருத்துவ அலுவலர் மணிமாறன், மருந்தாளுநர் மணி மாறன், சுகாதார ஆய்வாளர் சதிஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;