tamilnadu

img

கஜா புயலை விட கொடியவை மோடி - எடப்பாடி புயல்கள்

நாகப்பட்டினம், ஏப்.8-நாகை நாடாளுமன்றத் தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து, நாகை மாவட்டம், வேதாரணியம், இராஜாஜி பூங்காவில்சனிக்கிழமை இரவு தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்குத் தி.மு.க. நாகைத் தெற்கு மாவட்டச் செயலாளர் என்.கெளதமன் தலைமை வகித்தார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்தேசியக்குழு உறுப்பினரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான உ.மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.வி.காமராஜ், மற்றும்எல்.எஸ்.இ.பழனியப்பன், ஆர்.துரைராஜ், மா.மீ.புகழேந்தி, ஜி.சிங்காரவடிவேல், சி.பி.எம். வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, சி.பி.ஐ. ஒன்றியச் செயலாளர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தா.பாண்டியன் சிறப்புரையாற் றும்போது குறிப்பிட்டதாவது-வேதாரணியம் வரும்போது, இங்குள்ள மக்கள் சிலர் என்னைச் சந்தித்துக் கண்ணீருடன் கூறினார்கள். ‘‘கஜா புயலில் பல்லாயிரக்கணக்கான மரங்களையெல்லாம் இழந்து விட்டோம்; எங்களுக்கு வாழ்வு கொடுத்த மரங்கள் அவை…’’ என்றார்கள். என் கண்களும் கலங்கி விட்டன. எத்தனை எத்தனை ஆண்டுகள்…நாமும் நமது மூதாதையரும் வளர்த்த மரங்கள்… எல்லாவற்றையும் கஜா புயல் வீழ்த்திவிட்டது. கலங்காதீர்கள் மக்களே! மரங்களை மீண்டும் வளர்த்து விடலாம். ஆனால், கஜா புயலை விடக் கொடிய புயல்கள் மோடிப்புயலும், எடப்பாடிப் புயலும். இவர்களை வருகின்ற தேர்தல் புயலில் நாம் வீழ்த்தியாக வேண்டும்.


இரக்கம் இல்லாதவர்கள்


கஜா புயலுக்குப் பின், மரங்கள் தோப்புத் தோப்பாக வீழ்ந்து கிடக்கும்அவலக் காட்சிகளை நான் டி.வி.யில் பார்த்தேன். அபோது நான் பார்த்த ஒரு காட்சி- புயலில் பாதிக்கப்பட்ட ஒரு நாய், ஒர் ஆடு, ஆட்டுக்குட்டி. ஆடு இறந்து விடுகிறது. ஆட்டுக்குட்டிஅநாதையாக நடுங்கிக் கொண்டு நிற்கிறது, அப்போது, அந்த நாய், தவிக்கும் ஆட்டுக் குட்டிக்குப் பால் ஊட்டுகிறது. இந்த விலங்குகளுக்கு உள்ளஇரக்கம் கூட மோடிக்கும் எடப்பாடிக் கும் இல்லாமல் போய்விட்டதே… மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர், உணவு,இருக்க வீடு, உடுத்த உடை, பாதுகாப்பு இவற்றை அளிக்க வேண்டியதுஅரசின் கடமை. புயலில் அனைத்தையும் இழந்த இந்த மக்களை மோடியும் எடப்பாடியும் வந்து பார்த்தார்களா?, மக்களுக்கு ஆறுதல் கூறினார்களா? இது, ஆட்சியாளர்கள் செய்த மிகப்பெரிய கொடுமையல்லவா? இவர்கள் வீழும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


தூக்கி எறியப்படுவார்கள்


நீதிபதிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் பகுத்தறிவாதிகள், அறிஞர்கள், கலைஞர்களும் மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிராக மக்களைவாக்களிக்குமாறு தினமும் கூட்டாகஅறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் இப்போதுதான் மோடிக்கு எதிராக வாய் திறந்திருக்கிறார்கள். சத்ருகன் சின்கா போன்றவர்கள் பி.ஜே.பி.யைத் தூக்கிஎறிந்து வந்துவிட்டார்கள். தேர்தல் முடிந்து, மே-23க்குப் பிறகு, மோடியும்எடப்பாடியும் ஆட்சியை விட்டுத் தூக்கிஎறியப்படுவார்கள். . மத்தியிலும் மாநிலத்திலும் நமது ஆட்சிகள்தான்… மேகதாது அணையைக் கட்ட விடாமல் தடுப்போம், காவிரியின் சிறிய அளவுநீர் கூடக் கடலில் விழுந்து வீணாகாமல், பாசனத்திற்கும் குடிநீருக்கும் முழுமையாகப் பயன்படுத்தலாம்.ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற டெல்டாவை, விவசாயத்தைப் பாழாக்கும் திட்டங்களை ஒழிப் போம். கழனிகளில் பயிர் செழிக் கும், நீர்வளம் நிறையும். கஜா புயலில் நீங்கள் இழந்த மரங்கள் எத்தனையோ, அத்தனை மரங்களையும் மீண்டும் உருவாக்க மரக்கன்றுகள் பெற்று, எங்கும் நட்டு நிறைய கிடைக்கும் தண்ணீரால் மரங்களை க நீங்கள் காப்பாற்றுங்கள்; நல்லாட்சியால் உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம். இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.
;