திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

மதநல்லிணக்கத்தை காக்க மார்ச் 17 காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் திருச்சி மாவட்டக் குழு சார்பில் மதச்சார்பின்மை மற்றும் மதநல்லிணக்கத்தை காக்க சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக மார்ச் 17 அன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் அருண்  ஓட்டலில் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை திருச்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில்  மார்ச் 17 அன்று காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை  காத்திருப்பு போராட்டம் நடத்துவது. இதில் ஆயிரக்க ணக்கானோர் கலந்து கொள்வது என முடிவுசெய்யப்பட்டது. சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாநி லக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஐயுஎம்எல் ஹபீப்ரஹ்மான், டிஎம்எம்கே முகமதுராஜா, ஜமா அத்துல் உலமாசபை உண்ணாமுல்ஹாசன், சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;