பெரம்பலூர், ஜன.14- பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் இருந்து சென்னை, கோவை உட்பட ஆறு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளை பிரபல மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார் மற்றும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பொதுமக்கள் வசித்து வரும் பூலாம்பாடி பேரூ ராட்சி, மாவட்டத்தின் கடைக் கோடி பகுதியாக உள்ளது. மேற்கு பகுதி முழுவதும் பச்சை மலைத் தொடர் அர ணாக இருப்பதால், இப்பகு தியில் இருந்து பெரம்பலூர் மற்றும் ஆத்தூர் போன்ற நகரங்க ளுக்கு செல்ல பேருந்து மட்டுமே போக்குவரத்து சாதனமாக உள்ளது. இப்பகுதியில் இருந்து பல்வேறு வர்த்தக காரணங்க ளுக்காக வெளியூர் செல்ல முடியாமல் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்ட பூலாம்பாடியை பூர்வீகமாக கொண்ட தொழி லதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரி டம் பொதுமக்களின் கோரிக் கையை எடுத்துரைத்தார். பின்னர், தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் ஆலோசனை செய்தார். பூலாம்பாடியில் இருந்து சென்னை, கோவை, நாமக் கல், தஞ்சாவூர், கள்ளக் குறிச்சி, முசிறி ஆகிய ஆறு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து இயக்குவதற்கு பிரகதீஸ்குமார் அனுமதி பெற்றார்.
அதைத் தொடர்ந்து புதிய வழித் தடங்களில் பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்க ளன்று பூலாம்பாடியில் உள்ள பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. எம்.எல்.ஏக்கள் பெரம்பலூர் தமிழ்ச்செல் வன், ஆத்தூர் சின்னதம்பி, தலைவாசல் மருதமுத்து, பஞ்சு உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் ராமசாமி, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், சேலம் மண்டல போக்கு வரத்து மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று பூலாம்பாடி க்கு புதிய வழித் தடங்களில் பேருந்து இயக்குவதற்கு முழு ஏற்பாடு செய்து கொ டுத்த டத்தோ பிரகதீஸ் குமாருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
பூலாம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார் பல நற்காரியங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பூலாம்பாடி கிராமத்தில் மாணவர்களின் நலன் கருதி நூலகம் அமைக்க ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். விவசாயிகளின் நலன் கருதி ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கு 5 சென்ட் இடம் மற்றும் 40 லட்ச ரூபாய் சொந்த செலவில் தார்ச்சாலை, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காக 40 லட்ச ரூபாய் மதீப்பீட்டில் இரண்டு பண்ணைக் குட்டைகள் அமைக்கவும் உதவியுள்ளார். பூலாம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் ஆலயம் புனரமைப்பு பணிகள் செய்து கொடுத்துள்ளார். அத்துடன் சுற்றுச்சாலை அமைக்கவும், 5 ஆயிரம் மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சுற்றுச் சுவரை பேணிக் காக்கவும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரைய உதவி செய்துள்ளார்.