புதுக்கோட்டை, பிப்.3- ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், முடிவைத் திரும்பப் பெறக் கோரியும் திங்கள்கிழமை புதுக்கோட்டை எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் வி.லதாராணி தலைமை வகித்தார். தஞ்சை கோட்டை துணைத் தலைவர் என்.கண்ணம்மாள் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி முதுநிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி வி.திருப்பதி, வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் ஏ.சசிக் குமார், முகவர் சங்கங்களின் சார்பில் முகமது பாரூக், கருணாநிதி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான எல்ஐசி ஊழி யர்கள் பங்கேற்று மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.