tamilnadu

img

மடிக்கணினி வழங்கும் விழா

தஞ்சாவூர் ஜூலை.7- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச மடிக்கணினி மற்றும் பள்ளிச் சீருடை வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால் தலைமை வகித்தார்.  தலைமை ஆசிரியர் சி.கஜானா தேவி வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவருமான மா.கோவிந்தராசு 12 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி உ.துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம் நாடியம் சிவ.மதிவாணன், நகரச்செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வைரவன், ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.எம்.நீலகண்டன், பால் ஏ.பக்கர் ஆகியோர் பேசினர்.  முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கல்விப் புரவலர்கள் எஸ்.வி.பி.ரவிசங்கர், அம்மணிசத்திரம் கே.பாலு, கோ.ப.ரவி, டாக்டர் மு.சீனிவாசன், கிரில் நீலகண்டன், ஆதனூர் ஆனந்தன், டி.கே.சுப்பிரமணியன், சுரேஷ், கணேசன், சூப்பர் ராஜேந்திரன், ஞானம், சத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். குருவிக்கரம்பை பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன் நன்றி கூறினார்.