tamilnadu

img

கோவை மாநகரப் பகுதிகளில் சனியன்று பெய்த கனமழை

கோவை மாநகரப் பகுதிகளில் சனியன்று பெய்த கனமழையின் காரணமாக அவினாசி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை இராட்சத மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

;