திருச்சிராப்பள்ளி, அக்.8- ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேசன் சார்பில் கராத்தே மாணவ, மாணவிகளுக்கு தகுதிப்பட்டை வழங் கும் விழா திருச்சி சுப்பிரமணியபுபுரத்தில் நடைபெற்றது. விழாவில் திருச்சி, கோவை, கரூர், புதுக்கோட்டை, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர், வீராங்க னைகள் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்.கே.டபுள்யு.எப்-ன் சார்பில் தகுதிப் பட்டையும், அதற்கான சான்றிதழ்களும் தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் தலைமையில் வழங்கப்பட்டது.