tamilnadu

img

தஞ்சையில் முதல் கட்ட வாக்குப்பதிவு மந்தம்

தஞ்சாவூர், டிச.27-  தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பாபநாசம் ஒன்றியம், திருவையாறு, பூதலூர், கும்பகோணம் ஒன்றியம், அம்மாபேட்டை, திருவிடை மருதூர், திருப்பனந்தாள் ஒன்றியம் என மொத்தத்தில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 465 ஆண் வாக்காளர், 3 லட்சத்து 35 ஆயிரத்து 422 பெண் வாக்காளர், 21 இதர வாக்காளர்கள் என 6 லட்சத்து 63 ஆயிரத்து 908 பேர் வாக்காளர்கள்  உள்ளனர்.  இதில் மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக நடைபெற்ற ஏழு ஒன்றியங்களில் மதியம் 3 மணிவரை மொத்தம் 51 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியது. பொதுவாக வாக்குப்பதிவு மந்தமாகஇருந்தது. மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையத்தினை காணொலி காட்சி மூலம் நேரடி கண்காணிக்கப்பட்டது.