tamilnadu

img

தஞ்சாவூரில் தீ.ஒ.மு. வரவேற்புக் குழு கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 28- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் சனிக்கிழமை தஞ்சை மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பூதலூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் எம்.அறிவழகன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் பி. ராஜூ வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் கே.அபிமன் னன், சிபிஐ ஒன்றிய செயலாளர் சி. பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.   சிஐடியு மாவட்டக் குழு உறுப்பி னர் எம்.ஜி.சரவணன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கரிகாலன், டேனி யல், அம்பேத்கர் பெரியார் பாசறை அருண் மாசிலாமணி, சோலை தெட்சி ணாமூர்த்தி, இ.முகம்மது சுல்தான், கே. மருதமுத்து, கே.ராஜகோபால், கே. பழனிச்சாமி, என்.வசந்தா, ஏ.வைத்தி யநாதசாமி, எஸ்.மலர்கொடி, எஸ்.விஜயகுமார், பி.பாலசுப்பிரமணி, ஆர்.கோவிந்தராஜ், பி.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றியத் தலைவர் பி. தங்கமணி நன்றி கூறினார்.  வரவேற்புக் குழுத் தலைவராக ஏ.வைத்தியநாதசாமி, செயலாளராக கே.ராஜகோபால், பொருளாளராக எம்.ஜி.சரவணன், துணைத் தலை வர்களாக சோலை தட்சிணாமூர்த்தி, தமிழ்ச்செல்வன், ஏ.முருகேசன், துணைச் செயலாளர்களாக டேனியல், காந்திராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.  கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்பட்டது.  இதே போல் மதுக்கூர் ஒன்றி யத்தில் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் வி. ராஜகோபால் தலைமையில் நடை பெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் பி.அமல்ராஜ் வரவேற்புரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் சிறப்புரை யாற்றினார்.  சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.காசிநாதன், ஆர்.கலைச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் எம்.அய்யநாதன், வி.தொ.ச. ஒன்றியச் செயலாளர் கே.லெட்சு மணன், பெரியார் விடுதலை கழகத்தின் மாவட்டச் செயலாளர் கு.பாரி, திமுக நிர்வாகி வேலு ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.  வரவேற்புக் குழு தலைவராக பெரி யார் விடுதலை கழகம் கு.பாரி, செய லாளராக வி.ச ஒன்றியச் செயலாளர் எம்.அய்யநாதன், பொருளாளராக சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம், துணைத் தலைவர்களாக ஆர்.காசிநாதன், வேலு, ஏ.எம்.வேதாச் சலம், கே.லெட்சுமணன், ஏ.கிருஷ் ணன், துணைச் செயலாளர்களாக, வி. ராஜகோபால், பி.அமல்ராஜ், பி.அன்ன பூரணி ,எம்.கைலாசம் மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய நிர் வாகிகள் உள்ளிட்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.