திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

கண்ணீருடன் விடைபெற்ற வோஸ்னியாக்கி

அதிரடிக்கு பெயர் பெற்ற முன்னணி வீராங்கனையும், மாடலிங் மங்கையுமான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில் துனிசியா வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற வொஸ்னியாக்கி அதே ஆண்டு முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தொடர்ந்து டென்னிஸ் விளையாட முடியாது எனவும், நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது தோல்வி கடந்தவுடன் ஓய்வு முடிவை அறிவித்து கண்ணீருடன் விடைபெற்றார். பல ஆண்டுகள் டென்னிஸ் துறையில் சாதித்தாலும் வொஸ்னியாக்கி ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் மட்டுமே வென்றுள்ளார் (2018- ஆஸ்திரேலிய ஓபன்) என்பது குறிப்பிடத்தக்கது.

;