tamilnadu

img

மின் ஊழியர் அமைப்பு விழா

திருச்சிராப்பள்ளி, நவ.15-  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பில் 50 ஆண்டு பொன் விழாவின் துவக்க நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் வியாழனன்று நடைபெற்றது. திருச்சி தென் னூரில் உள்ள மின்வாரிய மண்டல தலைமை பொறியா ளர் அலுவலகம், மன்னார் புரம் மத்திய அலுவலகம், துறையூர், மணப்பாறை, லால்குடி, ஸ்ரீரங்கம் செயற் பொறியாளர் அலுவலகங் கள் முன் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநிலத் துணைத் தலை வர் ரெங்கராஜன், வட்ட செய லாளர் செல்வராஜ் முன்னாள் மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்விழா குறித்து பேசி னர். கோட்ட நிர்வாகிகள் நட ராஜன், ராதா. ஜான்பாஸ் கோ, ரவி, சீனிவாசன், நாக ராஜ், மணிகண்டன், சுப்பிர மணியன். ரவிசந்திரன், ரியாஜிதீன், அந்தோனி. கண்ணன், பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்ட னர்.