திருச்சிராப்பள்ளி: விருப்ப ஓய்வு திட்டத்தில் பென்ஷன் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கும் வகையில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். காலதாமதமின்றி மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் இயு, பிஎஸ்என்எல் - டி.ஒ.டி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்புத் துறை ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் உண்ணா விரதப் போராட்டம் திருச்சியில் திங்களன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு பிஎஸ்என் இயு மாவட்டத் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி பிஎஸ்என் இயு மாவட்டச் செயலாளர் அஸ்லம்பாஷா, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட உதவி செயலாளர்கள் இளங்கோவன், பாலசுப்ரமணியன், முருகேசன், மாவட்ட உதவித் தலைவர் ராஜப்பா, பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜான்பாஷா, மாநில அமைப்புச் செயலாளர் சின்னையன், கிளை தலைவர் நாகராஜன், கிளை செயலாளர் பால்ராஜ், மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொலைத்தொடர்புத் துறை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முபாரக் அலி ஆகியோர் பேசினர். பிஎஸ்என்எல் இயு கண்டோன்மெண்ட் கிளை செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.