tamilnadu

img

திருச்சியில் சிஐடியு மாநாட்டு நிதி வழங்கல்

திருச்சிராப்பள்ளி, டிச.8- திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழி லாளர் சங்கம் சார்பில் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதி அளிப்பு மற்றும் அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆயத்த பேரவை கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் குணசேகரன் தலை மை வகித்தார். சுமைப்பணி சம்மேளன மாநில தலைவர் குணசேகரன், சம்மே ளன மாநில பொறுப்பாளர் திரு வேட்டை, சம்மேளன பொதுச் செயலா ளர் வெங்கடபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் வாழ்த்தி பேசினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க செயலாளர் சேகர், சுமைப்பணி சங்க மாவட்ட நிர்வாகி கள் சேகர், இமாம், ரவி நாகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் ராமர் வரவேற்றார்.  கூட்டத்தில், சிஐடியு அகில இந்திய மாநாட்டில் நிதியாக ரூ 50 ஆயி ரத்தை மூன்றாவது தவணையாக மாவட்ட தலைவர் குணசேகரன் பொதுச்செயலாளர் வெங்கடபதியிடம் வழங்கினார். முதல் மற்றும் இரண்டா வது தவணையாக ரூ. 1 .25 லட்சம் முன்பே வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.