tamilnadu

img

புத்தகத் திருவிழா விளம்பரம் வெளியீடு

பொன்னமராவதி, ஜன.25-  புதுக்கோட்டை நகர்மன்றத் தில் பிப்.14 முதல் 23 வரை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் நடத் தும் புத்தக திருவிழா நடைபெற இருக்கிறது. அதையொட்டி பொன்னமராவதியில் சுவரொட்டி விளம்பரம் வெளியிடப்பட்டது. பொன்- புதுப்பட்டி அரசு நடு நிலைப்பள்ளியில் அறிவியல் இயக்க ஒன்றிய தலைவர் ராம கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது.  அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளர் மாரிமுத்து முன் னிலை வகித்தார். கவிஞர் முத்து நிலவன், அறிவியல் இயக்க  ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், பீர்முகம்மது, பாரதி புத்தகாலயம் ரவி, புதுகை புதல்வன், ஆசிரி யர் கோபாலகிருஷ்ணன், கண்டி யாநத்தம் ஊராட்சி முன்னாள் தலை வர் முருகேசன், தேசிய இளை யோர் தொண்டர் சிவராமகிருஷ் ணன் ஆகியோர் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் நடக்கவிருக்கும் நான்காவது புத்தக திருவிழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற் றும் பொதுமக்கள் திரளாக பங் கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது. நிறைவாக புத்தக திருவிழாவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக சுவ ரொட்டி விளம்பரம் வெளியிடப் பட்டது.

;