பொன்னமராவதி: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சியில் பிட் இந்தியா தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி தலைமை தாங்கினார். பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி திருநாவுக்கரசு மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயசூர்யா துவக்கி வைத்தனர். ஊராட்சி செயலர் செல்வம் நன்றி கூறினார். இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இதே போல் பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் சைக்கிள் பேரணி ஊராட்சி மன்ற தலைவர் கீதா சோலையப்பன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் சோலையப்பன், துணைத் தலைவர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.