tamilnadu

img

குடகனாறு விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி....

திண்டுக்கல்:
குடகனாற்று பாசன விவசாயிகள் 200 இருசக்கர வாகனங்களில் பேரணி நடத்திதிண்டுக்கல் ஆட்சியரிடம் மனுக்கொடுத்தனர். திண்டுக்கல் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர் பகுதியில் உற்பத்தியாகும் கல்லாறு, கூழையாறு ஆகிய சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து குடகனாறாக மாறி வருகிறது. குடகனாறு அழகாபுரி அணையில் சேர்ந்து பிறகு கரூரில் அமராவதி ஆற்றில் கலக்கிறது. சுமார் 110 கி.மீதூரம் பயணிக்கும் இந்த ஆற்றின் இருமருங்கிலும் பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வந்தன. 

ஆத்தூரில் இந்த ஆற்றின் குறுக்கேதிண்டுக்கல் மக்களின் குடிநீர் தேவையைப்பூர்த்தி செய்ய காமராஜர் காலத்தில் அணைகட்டப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் இந்தஆற்றின் கரையோரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டுபோயுள்ளன. இந்த நிலையில் பொதுப் பணித்துறையினர் ஆத்தூர் அணைக்கு மேல் பகுதியில் தடுப்பணை கட்டியதால் சித்தையன்கோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் குடகனாற்றை பயன்படுத்தி விவசாயம் செய்யும் பிற பகுதி விவசாயிகளுக் கும் இடையே தாவா உள்ளது. இந்த நிலையில் வேடசந்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் குடகனாறு உரிமை மீட்புக்குழு விவசாயிகள் 200 இருசக்கர வாகனங்களில் பேரணியாக புறப்பட்டு திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் வந்துஆட்சியரிடம் மனு அளித்தனர். ஒருவாரத் தில் குடகனாற்றில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக திண்டுக்கல் ஆட்சியர் உறுதியளித்தார்.

;