tamilnadu

img

காலிப்பணியிடங்களை நிரப்புக!.. திண்டுக்கல்லில் வாலிபர் சங்கம் நடைபயணம்....

திண்டுக்கல்:
விவசாயத்தை பாதுகாப் போம், வேலைகொடு. தரமான சுகாதாரம் கொடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்களன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் நடைபயணம் நடைபெற் றது.  நடைபயணத்தை மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ்குமார் துவக்கிவைத்தார். அப்போதுஅவர் கூறியதாவது:-மோடி அரசின் புதிய வேளாண்சட்டங்கள் அமலுக்கு வந்தால்திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் திண்டுக்கல் மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் கொண்டு சென்று விற்க முடியாது. தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள், வாலிபர்கள் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.

தமிழகம் முழுவதும் 10 லட்சம்பணியிடங்கள் காலியாக உள் ளன. அதை நிரப்ப அதிமுக  அரசுமுன் வரவில்லை. மின்வாரியத்தில் 52 ஆயிரம் காலிப்பணியிடங் கள் உள்ளன. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தமிழகஅரசு முயற்சி மேற்கொள்ளவில்லை.திண்டுக்கல்லில் பாரம்பரிய தொழில்களான தோல்பதனிடும் தொழில், பூட்டு, சுருட்டு ஆகியவை  நலிந்துவருகின்றன. இந்தத் தொழில்களை மேம்படுத்த தமிழக அரசிடம் திட்டம் இல்லை. 

செவிலியர்கள், மருத்துவர் கள், ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக ள்ளன. அவற்றை நிரப்ப அரசு முன்வரவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நடைபயணத்தை வாழ்த்தி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன் ஆகியோர் பேசினர். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலத் துணைச்செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ், மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.பாலாஜி, விஷ்ணுவர்த்தன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.

;