வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

நீட் தேர்வு எழுதாமல் மருத்துவராக்குகிறார் எடப்பாடி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு....

திண்டுக்கல்:
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவராக 7.5 சதவீதஇட ஒதுக்கீட்டை தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல்லில்  பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது தான் நீட். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நடத்துவோம்” என  கூறியுள்ளார் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறியுள்ளார்.  அரசுப் பள்ளிகள், சாதாரண பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட்தேர்வு எழுதாமல் மருத்துவர் ஆக்குவேன் எனக் கூறிதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் 316 பேர் மருத்துவராகி உள்ளனர்” என்றார்.அமைச்சர் தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது தினம்தோறும் பத்திரிகைகள், ஊடகங்களில் தனது பெயரும், படமும் வரவேண்டுமென்பதற்காகவே திட்டமிட்டு பொய்பேசுகிறாரா? எனத் தெரியவில்லை. மொத்தத்தில் மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.

ரூ.2,500 டாஸ்மாக் மூலம் மீண்டும் வந்துவிடும்
அமைச்சர் சீனிவாசன், திண்டுக்கல்ஒன்றியத்துக்கு உட்பட்ட கோம்பையான் பட்டியில்  மினி கிளினிக்-கை திறந்து வைத்தார். அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது   தொண்டர் ஒருவர், “பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான  கூப்பன் தனக்குக் கிடைக்கவில்லை” என்றார். அதற்குப் பதிலளித்த அமைச்சர்  “டாஸ்மாக்கோட பெரியகொடுமையா  போச்சு... எப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார் பாரு?”  என சிரித்தார். இவருக்குக் கொடுக்கப்படும் காசு  மீண்டும் (டாஸ்மாக் மூலம் ) நமக்குதான் வரும். இவருகாசு எங்கேயும் போகாது. அரசாங்கப் பணம் அரசாங்கத்துக்கே வந்து சேரும். வேஷ்டி, சேலை, அரிசி, பருப்பு, கரும்புன்னு கொடுக்குறது. அது அவரு மனைவிக்கு போயிடும். கரும்பை பாதிவிலைக்கு விக்க முடியாது” என்றார்.

;