tamilnadu

img

காவல்நிலையத்தில் வைத்து சிபிஎம் பழனி நகரச் செயலாளர் மீது தாக்குதல்... நகர காவல் சார்பு ஆய்வாளர்-காவலர்களின் அடாவடிச்செயல்.... சிபிஎம் திண்டுக்கல் மாவட்டக்குழு கண்டனம்

திண்டுக்கல்:
போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து,  சிபிஎம் பழனி நகரச்செயலாளர் மீது தாக்குதல் நடத்தியகாவல்துறைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் திண்டுக் கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்என வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்டஒருங்கிணைப்புக் குழு அறைகூவலுக்கு இணங்க தில்லி சலோ என்ற விவசாயிகள் அணிவகுப்பு தில்லியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஆதரவு போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இப் போராட்டம் கடந்த நவம்பர் 30 ஆம்தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங் கிணைப்புக் குழு அறைகூவல்படிஇப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மோடி அரசு, அம்பானி, அதானி கொடும்பாவி எரிப்பு போராட்டம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண் டவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பழனி காவல்துறையினர் அத்துமீறியுள்ளனர். ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டசிபிஎம் பழனி நகரச் செயலாளர்  கந்தசாமியை பழனி நகரகாவல் சார்பு ஆய்வாளர் ரஞ்சித் உத்தரவின் பேரில் தனிமைப்படுத்தி அடிவாரம் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.காவல்துறையின் இந்த அடாவடித் தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பழனி நகர செயலாளர் மீது தாக்குதல் நடத்திய காவலர் மீதும் அதற்கு உத்தரவிட்ட பழனி நகர சார்புஆய்வாளர் மீதும்  தமிழக அரசு மற்றும்திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

;