திண்டுக்கல் அருகே கணக்கில் காட்டப்படாத ரூபாய் 2 கோடியே 74 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள பாலம் ராஜக்காபட்டி பகுதியில் மதுரை கிருஷ்ணாபுரம் ஐசிஐசிஐ எனும் தனியார் வங்கியில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு கணக்கில் காட்டப்படாத ரூபாய் 2 கோடியே 54 லட்சம் tn 19 கே 88 86 என்ற பொலிரோ வாகனத்தில்
கொண்டு செல்லப்பட்டது திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள பாலம் ராஜக்காபட்டி அருகில் வாகனம் சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி வடிவேல், முருகன் சிறப்பு சார்பு ஆய்வாளர், சி.மணி ஏட்டு துரைராஜ் காவலர், சசிகுமார் ஆகியோர் தடுத்து நிறுத்தினர் இதனையடுத்து வாகனத்தில் சோதனையிட்டபோது கணக்கில் காட்டப்படாத ரூபாய் 2 கோடியே 54 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது இதனையடுத்து பணம் மற்றும் வாகனத்தை அதிகாரிகள் கைப்பற்றினர் இதனை அடுத்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் வாகனத்தை திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு தாசில்தார் லட்சுமி முன்பாக ஐசிஐசிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்கள் நான்கு பெட்டிகளில் கொண்டு வந்த பணத்தையும் காண்பித்தனர் பின்னர் சீல் வைக்கப்பட்டு முறைப்படி அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
இதேபோல் ஆதிலட்சுமி குளம் அருகில் கனரா வங்கியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரூபாய் 20 லட்சமும் கைப்பற்றப்பட்டது ஒரே நாளில் இரண்டு கோடியை 74 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது திண்டுக்கல் பகுதியில் வாக்காளர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது