tamilnadu

கிராம ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர்களுக்கு பயிற்சி

தருமபுரி, ஜன. 20- தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சித் தலை வர், துணைத் தலைவர்களுக்கு பயிற்சி ஜன.22, 23 ஆகிய இருதினங்கள் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக் கும் உள்ளாட்சி தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்ட  கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும்  துணைத் தலைவர்களுக் கான ஒரு நாள் அறிமுகப் பயிற்சி முகாம்  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சாலையில் அமைந் துள்ள ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற  உள்ளது.  இதில், ஜன -22ஆம் தேதியன்று தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம். ஆகிய ஒன்றியங்களில் உள்ள 123 ஊராட்சிகளில் உள்ள 246 தலை வர் மற்றும் துனைதலைவர்கள் பயிற்ச்சி முகாமில் பங்கேற் கின்றனர்.  ஜன-23ஆம் தேதியன்று அரூர், மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களில் உள்ள 128, ஊராட்சிகளில் உள்ள 256 தலைவர் துனைத் தலைவர்கள் என மொத்தம் 251 ஊராட்சிகளில் 502 தலை வர் துனைத்தலைவர்கள் பங்கேற்கின்றனர்.மேலும்,  தேர்ந் தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள்  மூலம் ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெறும் பொருட்டு அரசி யலமைப்பு ஆணைகள், அவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தப்படும்  முதன்மை திட்டங்கள் குறித்து அறி யவும் அதனை நன்கு செயல்படுத்திடும் நோக்கத்துடன் நடைபெறும் இப்பயிற்சியில் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன் றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளின் தலைவர்கள்  மற்றும் துணைத் தலைவர்கள் இப்பயிற்சியில் தவறாது  கலந்து கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.