tamilnadu

img

கெளாப்பாறை அரசு பள்ளியில் சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

 தருமபுரி, ஜன.1- அரூரை அடுத்த கெளாப்பாறை அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  அரூா் ஊராட்சி ஒன்றியம், கெளாப்பாறையில் அனை வருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் (ஆா்.எம்.எஸ்.ஏ) , நபார்டு வங்கி நிதியுதவியில், 2016 - 17-ஆம் நிதி ஆண்டில், இந்த உயா்நிலைப் பள்ளிக்கான கட்டிடம்  கட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் கெளாப்பாறை, எருக்கம்பட்டி, கீரைப்பட்டி புதூா், செல்வசமுத்திரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 200க்கும் மேற் பட்ட மாணவ, மாணவியா்கள் பயின்று வருகின்றனா்.  பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவா் வசதி இல்லாத தால், கால்நடைகள் பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிகின் றன. இதனால் மாணவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை யுள்ளது. எனவே, கெளாப்பாறை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேம்படுத் தும் நோக்கில், சுற்றுச்சுவா் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.