tamilnadu

img

மோடி மக்களின் பாதுகாவலர் அல்ல: அதானி, அம்பானியின் பாதுகாவலர் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

தருமபுரி, ஏப்.5-

பிரதமர் மோடி மக்களின் பாதுகாவலர் அல்ல - அதானி, அம்பானியின் பாதுகாவலர் என அரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்எல்ஏ குற்றச்சாட்டியுள்ளர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், பாப்பிரெட்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி, அரூர் (தனி) தொகுதி வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து கடத்தூர் மற்றும் அரூரில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ, தலைமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் திமுகமுன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்எல்ஏ பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னால் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகப்போகிறார். வேட்பாளர் ஆ.மணி இயக்க பணிகளில் வெற்றி கண்டவர். தவித்த வாய்க்கு தண்ணீர் தரவேண்டும் என முனைப்போட இருக்கிறார். தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து இருக்கிறோம். ஆனால், அதிமுக தலைமையிலானகூட்டணியை பாஜக கூட்டணி என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சொல்கிறார். முதல்வர் எடப்பாடிபழனிசாமி அதிமுக கூட்டணி என்கிறார். பாமக நிறுவனர் இராமதாஸ் பாமக கூட்டணி என்கிறார். இதனால் கூட்டணிக்கு பெயர் தெரியாமலே திக்குமுக்காடுகிறது. எனவே, 40 நாடாளுமன்ற தொகுதியிலுமும் திமுக கூட்டணி வெல்வோம். நம் கூட்டணி கொள்கை கூட்டணி எனவே மக்கள் ஆதரிப்பார்கள்.மேலும், தருமபுரியில் 25 ஆண்டுகாலமாக பாமகவைச் சேர்ந்தவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தனர். ஒருமுறை தான் திமுகநாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது.


திண்டிவனத்தில் பிறந்த அன்புமணி தருமபுரியில் நிற்கிறார். இந்த மாவட்டத்திற்காக அன்புமணி செய்தது என்ன ?இந்த இடைத்தேர்தல் அதிமுகாவால் வந்த தேர்தல், அதிமுக நண்பர்களே பிரிந்து நிற்கிறார்கள், மக்களுக்கு தொண்டு செய்ய தயாராகஇல்லை. இவர்களுக்குள் ஏற்பட்ட குடுமிசண்டையால் தேர்தல் வந்திருக்கிறது.அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நன்மை உண்டா? விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என சட்டமன்றத்தில் கேட்டோம். ஆனால் முதல்வர் எடப்பாடி வாயே திறக்கவில்லை. பல பிரச்சனைகள் கிராமத்தில் உள்ளன. எதையும் தீர்க்கவில்லை. 2004 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அது கதாநாயகனாக இருந்தது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையும் கதாநாயகனாக உள்ளது. மாநில பட்டியலில்கல்வி இருந்திருந்தால் சமச்சீர் கல்வி கிடைக்கும். நீட் தேர்வுஇருந்திருக்காது தற்போது மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. தமிழகபாடத்திட்டத்தில் நீட் தேர்வுக்கு கேள்வி இல்லை. மத்திய அரசின் பாடத்திட்டத்தில் கேள்வி கேட்கின்றனர். மாநில திட்டத்திலேயே கல்வியை விட்டுவிடுகிறோம் என்று ராகுல் சொல்லி இருக்கிறார்.நிச்சயம் தமிழகத்துக்கு நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இன்று பாஜகவினர் நவோதாய பள்ளிதொடங்கி இருக்கிறார்கள். காரணம் சமஸ்கிருதம் படிக்கத்தான்இந்த ஏற்பாடு. இதை முறியடிக்கவேண்டும். ஜிஎஸ்டி வரியால்அனைத்து பொருட்களும் விலை ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு.திமுக ஆட்சியில் ரூ.430 ஆக இருந்தசிலிண்டர் இன்று ரூ.1,000 ஆக விலை உயர்ந்திருக்கிறது. தற்போது ரூ.300கேபிள் கட்டணம் வசூல் நடக்கிறது.திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.100 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழ்நாட்டில் ரூ.4 லட்சம்கோடிகடன் உள்ளது தமிழக அரசின்திறமையற்ற நிர்வாகத்தால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. மேலும், இந்திய நாட்டின் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி தன்பெயருக்கு முன்னால் போட்டுள்ளார். இவர் மக்களை பாதுகாக்க வில்லை. அதானியையும், அம்பானியையும் பாதுகாக்கிறார். குஜராத்தில் ஏழையின் தாய் மகன் என்று சொல்பவர் ரூ.10 லட்சத்தில் ஆடை உடுத்துகிறார். ஆக இவர் பெரும் மகா நடிகர்.எனவே, மக்கள் நலனில் அக்கறைகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை தோற்கடிக்க தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், இடைத்தேர்தலில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில்ஆ.மணிக்கும், அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு உதய சூரியன்சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதனையடுத்து, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.மணி பேசியதாவது, நடைபெறும் இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். 3 மாதத்துக்குள் ஆழ்துளை கிணறு அமைத்தும், ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பேன் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் பார்.இளங்கோவன் ஏம்ஏல்எ, பி.என்.பி.இன்பசேகரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ஆர்.சிசுபாலன், இடைகமிட்டி செயலாளர்கள் பாப்பிரெட்டிபட்டி சி.வஞ்சி, அரூர் ஆர்.மல்லிகா, மொரப்பூர் கே.தங்கராசு, மதிமுக மாவட்டச் செயலாளர் அ.தங்கராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன், இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் நிஜாமுதின், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் தவமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;