தருமபுரி, அக்.5- தருமபுரியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கா ளர் பட்டியலை சனியன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி வெளியிட்டார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வார்டு வாரி யாக வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு, உள்ளாட்சி வாக்கா ளர் பட்டியலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியல் தருமபுரி மாவட்ட ஊராட்சி அலுவலகம், தருமபுரி நகராட்சி அலு வலகம், 10 பேரூராட்சி அலுவலகங்கள்,10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் 251 கிராம ஊராட்சி களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பாகம், வார்டு ஏதும் தவறுதலாக இடம் மாறியிருப்பின் (உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புகள்) விண்ணப்பத்தை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), நகராட்சி ஆணையர், பேரூ ராட்சி செயல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண் டும். மேலும் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மற்றும் பதிவுகளை ஆட்சேபிக்க விரும்பும் ஒருவர் அதற்கான விண்ணப்பத்தை 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளிலுள்ள காப்புரைகளின் கீழ் தொடர்புடைய சட்ட மன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது நகராட்சி ஆணையர் மகேஸ் வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சரவணன், உதவி இயக்குநர் பேரூ ராட்சிகள் தி.ஜிஜா பாய், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சந்தானம், நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூ ராட்சி செயல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.