tamilnadu

img

சிஐடியு தருமபுரி மாவட்ட மாநாடு துவக்கம்

தருமபுரி, ஜூன் 15- சிஐடியு தருமபுரி மாவட்ட  11 ஆவது மாநாடு சனியன்று துவங் கியது. இம்மாநாட்டின் முதல் நிகழ்வாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தொழிலாளர் பேரணி தருமபுரி புரோக் கர் ஆபிஸ் அருகில் இருந்து துவங்கி யது. இப்பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும், மாநாட்டு வரவேற்புகுழு தலைவருமான எம்.சுருளிநாதன் துவக்கி வைத்தார். இப்பேரணி வேல்பால்டிப்போ, எஸ்.வி.ரோடு, பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று குமாரசாமிபேட்டை பொதுகூட்ட மைதானத்தை வந்தடைந்தது.  இப்பேரணியில் சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்ட செயலாளர் சி.நாகராசன், மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன், பொருளாளர் சி.முரளி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, இப்பேரணியில் பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரைவார்க்கக் கூடாது. தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தக் கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகை களுடன் முழக்கமிட்டு அணிவகுத்து சென்றனர்.