tamilnadu

img

தலித்துக்கென ஒதுக்கிய ஊராட்சி பதவியை பிற வகுப்பினருக்கு ஏலம் விட்ட ஆதிக்க சாதியினர்

 

கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்; தலித் மக்கள் போராட்டம்

பெரம்பலூர், டிச.27- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம்  பேரளி கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக தீண்டாமை வன்கொடுமை நிலவி வருகிறது. தலித் மக்கள் பொது வழித்தடங்களில் சைக்கிளில் ஏறிச் செல்ல முடியாது. ஆதிக்க சாதியினர் 5 ஆயிரம் தலைக்கட்டுக்கு மேல் உள்ளனர். தலித் பகுதி மக்கள் 350 குடும்பங்களே வசிக்கின்றன. இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு தலித் சான்றிதழ் பெற்று தேர்வு செய்துள்ள னர். அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன் ஆதிக்க சாதியினர் மட்டும் ஒன்று கூடி கூட்டம் நடத்தி ஒன்றிய கவுன்சிலர் பதவி யை க.மணிகண்டன் என்பருக்கு ரூ. 21 லட்சத்திற்கும், ஊராட்சி துணைத் தலைவர் பதவியை ராமசாமி என்பவருக்கு ரூ. 18 லட்சத்திற்கும், வார்டு உறுப்பினருக்கு ரூ. 3 லட்சம் என ஏலம் விட்டு தேர்வு செய்து விட்டதாகவும் ஆதிக்க சாதியினரே தேர்வு  செய்ததால் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்தியிடம் உதவித் தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட ராமசாமிதான் தலைவராகவும் செயல்படுவார் என பத்திர த்தில் உறுதிமொழி எழுதி வாங்கியுள்ளனர் என்றும் தலித் மக்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தலித் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் சாந்தா, தேர்தல் பார்வையாளர் அனில்மேஷரம் மற்றும் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத் தினால் பேரளி தலித் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கா மல் கண்களில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.  அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தலித்துக்கென அறிவித்த ஊராட்சி தலைவர் பதவியை முறைகேடாக ஏலத்தின்  அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை  சேர்ந்தவரை தேர்வு செய்த ஜனநாயக விரோத செயலை மாவட்ட நிர்வாகமும், தேர்தல் பார்வையாளரும் கண்டு கொள்ளா ததின் விளைவு இது.  எனவே தமிழக அரசு, அப்பகுதி  மக்களின் கோரிக்கை மீது உரிய நட வடிக்கை எடுத்து மறு தேர்தல் நடத்தி ஜனநா யகத்தை காக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தியுள்ளனர்.