tamilnadu

img

சாலையில் கவிழ்ந்த டாஸ்மாக் லாரி

வேடசந்தூர், ஜூலை 10-  திண்டுக்கலில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கியில் இருந்து வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி, எரியோடு, தென் னம்பட்டி ஆகிய டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு  மதுபாட்டில் களை இறக்குவதற்காக ஒரு மினி லாரி புறப்பட்டது. லாரியை திண்டுக்கல் பொண் மாந்துறையைச் சேர்ந்த பரம சிவம்(40) ஓட்டிவந்தார். சுமைப் பணி தொழிலாளர்கள் விஜயன் (50), குமரேசன்(40) ஆகியோர் உடன் வந்தனர். திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன் பட்டியை கடந்து மினி லாரி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமான பின்பக்க டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி தாறுமாறாக ஓடி சாலை யின் நடுவே கவிழ்ந்தது. இதில் மினிலாரியில் இருந்த மதுபாட்டில்கள் உடைந்து மது ஆறாக ஓடியது.  அப்போது அந்த வழியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் மது பாட்டில்களை தங்கள் கொண்டு வந்த பைகளில் எடுத்துக்கொண் டனர். காயமடைந்த லாரி ஓட்டுநர் பரமசிவம், சுமைப்பணி தொழிலா ளர்கள் விஜயன், குமரேசன் ஆகி யோர் 108 ஆம்புலன்சில் வேட சந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் இது குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.