உதகமண்டலம், ஜூலை 28- நீலகிரி மாவட்டம் சேரங்கோடு பகுதியில் உள்ள டேண்டீயை பாதுகாக்க வேண்டும் என வலி யுறுத்தி ஆகஸ்ட் 9 ஆம் தேதி யன்று டேண்டீ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடை பெறும் என்று உதகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநி லம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரு கின்றது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் உதகையில் சனிக் கிழமையன்று துவங்கியது. இவ்வியக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதனையடுத்து ஜி.ராம கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பாஜக மோடி அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை, பாதிப்புகளையும், அபாயங் களையும் உண்டக்கும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வலுவான மக்கள் இயக்கங்களை நடத்த வேண்டும். நீலகிரியில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை கழகம் (டேண்டீ) வெளியிட்டுள்ள அறிக்கையில் சேரங்கோடு, சேரம்பாடி, கொளப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள 3 டிவிசன்களில் உள்ள 278 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த முடிவை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று சேரங்கோடு பகுதியில் உள்ள டேண்டீ அலுவலகத்தை முற்றுகையிடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மாண வர்கள் குறைவான எண்ணிக்கை யில் உள்ளனர் என்ற காரணத் தால் இடுஹட்டி, கீளூர் கோக்க லாடா, தங்காடு, கெத்தை, ஓர நள்ளி, காந்திபுரம், கண்ணேரி மந்த னை ஆகிய பள்ளிகள் மூடப்பட்டு ள்ளன. நீலகிரி போன்ற பின் தங்கிய மாவட்டத்தில் மாணவர் பற்றாக்குறை என்ற காரணத்தால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை கைவிட வேண்டும். அரசுப் பள்ளிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத் தலை நகரான உதகையில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டுமெனவும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை மேம் படுத்த வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக வன விலங்கு தாக்குதல்களால் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக வன விலங்குகள் ஊருக்குள், குடியிருப்பு பகுதிகளில் வருவது அதிகரித்து வருகிறது. எனவே மனித – வனவிலங்கு மோதல்களை தடுக்க ஆக்கப் பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக் கை அதிகரித்து வருவதால் வாகன நிறுத்தங்களுக்கான இடங்கள் இல்லாமல் மிகுந்த நெரிசல் உருவாகி வருகிறது. எனவே உதகையில் உள்ள குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகுதியை வாகன நிறுத்தும் இடமாக மாற்ற வேண்டும். மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்து வருகிற ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் மாவட்டத் தில் 60 இடங்களில் தொடர் இயக்கங்களை நடத்திட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார். பேட்டியின் போது சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு ஆகியோர் உடனிருந்தனர்.